பின்னணி

உபுண்டு இயங்குதளம் நிறுவப்படுகிறபோது இயல்பிருப்பாக /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core அடைவினுள் தமிழுக்காக சேர்க்கப்படும் மின்னெழுத்து lohit_ta.ttf ஆகும். இதனைத் தாண்டி உபுண்டு களஞ்சியத்தில் கிடைக்கப் பெறுவதாய் மூன்று மின்னெழுத்துக்கள் உள்ளன. அவை பொதியாக்கப்பட்டு கிடைக்கப்படும் இடம் http://packages.ubuntu.com/intrepid/ttf-tamil-fonts . இவற்றை முனையத்திலிருந்து நிறுவிக் கொள்ளலாம். நிறுவிட கொடுக்கப்பட வேண்டிய ஆணை,

$ sudo apt-get install ttf-tamil-fonts

இங்ஙனம் நிறுவியதும் /usr/share/fonts/truetype/ttf-tamil-fonts அடைவினுள் TAMu_Kadampari.ttf, TAMu_Maduram.ttf, TAMu_Kalyani.ttf ஆகிய மின்னெழுத்துக்கள் கிடைப்பதை காணலாம்.

இம்மின்னெழுத்துக்கள் பொலிவுடையதாக இருந்தாலும் சில பிழைகளையும் கொண்டதாக திகழ்கின்றன. இதனைப் புரிந்து கொள்ள ஓபன் ஆபீஸ் பயன்பாட்டினை தொடங்கி ஆங்கில சொற்களும் தமிழ் சொற்களும் கலந்து பத்திகளை தட்டெழுதவும்.

ஆங்கிலம் தட்டெழுதுகிற போது Arial மின்னெழுத்தையும் தமிழில் தட்டெழுதுகிறபோது TAMu_Maduram.ttf கொண்டும் எழுதவும்.
இதே பத்தியை நகல் எடுத்து அடுத்தப் பத்தியாக ஒட்டவும்.
அப்படி ஒட்டப்பட்ட பத்தியினை முழுவதுமாக தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்ட உரை பகுதியின் மின்னெழுத்தாக TAMu_Maduram.ttf மின்னெழுத்தை தேர்வு செய்யவும்.
அப்படி செய்கிறபோது ஆங்கில எழுத்துக்களைக் கொண்ட அம்மொழிச் சொற்களும் புரியாத தமிழ்ச் சொற்களாக மாறியிருப்பதைக் காணலாம். கீழ்க்கண்ட திரைக் காட்சி இதனைப் புரிந்து கொள்ள உதவும்.பிழை
இப்பொழுது அந்த பிழைகளை எப்படி திருத்துவது என்பதை பார்ப்போம்

இங்கே TAMu_Kalyani.ttf மின்னெழுத்து பிழை திருத்த எடுத்து கொள்ளப்பட்டுள்ளது,

TAMu_Kalyani.ttf-ஐ FontForge மூலமாக திறக்கவும்Buggy Font

Advertisements